world

ஈரான் - இஸ்ரேல் மோதல்: மத்தியஸ்தம் செய்ய தயார்- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
June 19, 2025
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில்,ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர் முகமது பின் ஸாயத் அல் நஹ்யானுடன் புதின் தொலைபேசி வாயிலாக பேசினார்.
அப்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் தற்போது நடைபெற்றுவரும் மோதல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.அத்துடன் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த சா்ச்சைக்குரிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான அரசியல் மற்றும் தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவா்களும் வலியுறுத்தினார்.
இந்த உரையாடலின்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின் கூறினார். மேலும், இது தொடா்பாக ஏராளமான வெளிநாட்டுத் தலைவா்களுடன் பேசிவருவதையும் அல் நஹ்யானிடம் புதின் எடுத்துரைத்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது செஜ்ஜில் வகை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
June 19, 2025
டெஹ்ரான்,
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஈரான் தினந்தோறும் அறிவிப்பது இல்லை. கடைசியாக, கடந்த 16-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், 224 பேர் பலியானதாகவும், 1,277 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.ஆனால், வாஷிங்டனில் உள்ள ஈரானிய மனித உரிமைக்குழு, ஈரானில் இதுவரை 585 பேர் பலியாகி இருப்பதாகவும், 1,300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறியுள்ளது.அதுபோல், ஈரான் இதுவரை 400 ஏவுகணைகளையும், நூற்றுக்கணக்கான டிரோன்களையும் வீசி தாக்கி உள்ளது. அத்தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
இன்று 7-வது நாளாக இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் நீடித்து வருகிறது.இந்தநிலையில், இஸ்ரேல் மீது செஜ்ஜில் வகை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் தயாரித்த இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்க கூடியது என்று கூறப்படுகிறது.
செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என கூறப்படுகிறது.
செஜ்ஜில் வகை ஏவுகணை அதிவேகமாக இலக்கை அடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என கூறப்படுகிறது. செஜ்ஜில் வகை ஏவுகணைகளை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - இரான் சண்டையில் செஜ்ஜில் ஏவுகணையின் பயன்பாடு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. செஜ்ஜில் ஏவுகணையானது 18 மீட்டர் உயரம் கொண்டது. இது கிட்டத்தட்ட 700 கிலோ கிராம் எடையுடன் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading ads...