என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட் ராமதாஸ் அறிவிப்பு!
Politics
June 25, 2025

விழுப்புரம்:
என்னுடன் இருப்பவர்களுக்கே சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தனக்கு மட்டுமே இருப்பதாக கூறிய ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியில் பாமக போட்டியிடும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத்தில் உச்சத்திற்கு வந்தது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார். இதன்பின் பாமக தலைவர் பொறுப்பை தாமே எடுத்து கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.